சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
1. கண்ணன் இன்றும் மன்னனாக ஆட்சி செய்யும் திருத்தலம்...துவாரகை2. விநாயகப்பெருமானுக்குரிய கணேச பஞ்சரத்னத்தைப் பாடியவர்...ஆதிசங்கரர்3. பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமான் மீது பாடிய கவசநூல்...சண்முகக் கவசம்4. 'நமசிவாய' என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது? திருவாசகம்5.தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்?அறவிடை(அறம்-தர்மம், விடை-காளை வாகனம்) 6. யாதுமாகி நின்றாய் காளி என்று உமையவளைப் போற்றிய புலவர்...பாரதியார்7. வெற்றியைத் தரும்முருகப்பெருமானுக்குரிய தமிழ் மந்திரம்....வேலு(ம்) மயிலும்8. மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள்....அறம், பொருள், இன்பம், வீடு(மோட்சம்)9. 'கடை விரித்தேன் கொள்வார் இல்லை' என்று வருந்திப் பாடிய அருளாளர்....வள்ளலார்10. ராமபிரானுக்காகப் போர் புரியக் கிளம்பிய ஆழ்வார்...குலசேகராழ்வார்