உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* வில்வ மரத்தை வீட்டில் வளர்த்தால் தினமும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலன் கிடைக்கும்.* வில்வ இலைகளால் சூரிய பகவானுக்கு அர்ச்சனை செய்யக் கூடாது.* வில்வமரத்தை பராமரிப்பவருக்கு அஸ்வ மேத யாகம் செய்த புண்ணியம் ஏற்படும். * நாவடக்கம் உள்ளவர், வீண் செலவு செய்யாதவர்களுக்கு லட்சுமியின் அருள் கிடைக்கும்.* இரவு பூஜையின் போது காசி விஸ்வநாதருக்கு ராமநாமம் எழுதிய வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வர். * நாகர்கோவில் அருகே சுசீந்திரம் கோயிலில் தாணுமாலயசுவாமி இருக்கிறார். தாணு - சிவன், மால் - விஷ்ணு, அயன் - பிரம்மாவைக் குறிக்கும் என்பதால் இது மும்மூர்த்தி தலமாக உள்ளது.* மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மட்டும் 33,000 சிற்பங்கள் உள்ளன. இச்சிறப்பு உலகில் வேறெந்த கோயிலுக்கும் கிடையாது.* முருகப்பெருமானுக்கு முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தள் மலர்கள் சிறப்பானவை. * இளநீர் அபிஷேகம் செய்து சுவாமியை வழிபட்டால் உயர்ந்த பதவி உங்களைத் தேடி வரும். * விநாயகருக்கு கரிசலாங்கண்ணி இலைகளால் அர்ச்சனை செய்தால் செல்வம் பெருகும்.* தெய்வங்களுக்கு பூஜை செய்த பூக்கள், குங்குமத்தை மறுபடியும் பூஜைக்கு பயன்படுத்தக் கூடாது.