உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* பூர்வீக சொத்தில் இருக்கும் பிரச்னை தீர, செவ்வாய்தோறும் முருகனுக்கு அரளிப்பூ சூட்டி பூஜை செய்யுங்கள். * காதல் கைகூட சித்திரை நட்சத்திரத்தன்று வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகனை வணங்குங்கள்.* புது வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து, காயவைத்து அதை திரியாக மாற்றி விளக்கேற்றினால் வீட்டில் உள்ள பீடை அகலும்.* வாழைத்தண்டு திரியில் தீபம் ஏற்ற தெய்வ குற்றம் நீங்கும்.* விநாயகருக்கு தேங்காய் எண்ணெய்யிலும், மகா லட்சுமிக்கு பசு நெய்யிலும் தீபம் ஏற்றுங்கள்.* நல்ல செயல்களை செய்ய வெளியே செல்லும்போது அருகம்புல்லை எடுத்துச் செல்லுங்கள்.* தெய்வங்களுக்கு பூஜை செய்த பூக்கள், குங்குமத்தை மீண்டும் பூஜைக்கு பயன்படுத்தாதீர். * இளநீர் அபிேஷகம் செய்து தெய்வத்தை வழிபட்டால், உயர்ந்த பதவி உங்களைத் தேடி வரும்.* கர்ப்பிணிகள் பக்தி நுால்களை படித்து வந்தால் சுகப்பிரசவம் ஏற்படும். * சனிக்கிழமையன்று (காலை 7:00 - 8:00 மணி) அரச மரத்தை 108 முறை வலம் வந்து, மகாலட்சுமியை வணங்குங்கள்.