உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* பாலை நிலத்திற்கு உரிய தெய்வம் கொற்றவை அல்லது காளி. * துர்கையம்மனுக்கு 'ஸ்கந்த மாதா' என்றும் பெயருண்டு. இதன் பொருள் முருகனின் தாய்.* திருவேற்காடு கருமாரியின் உக்கிரத்தை தணித்தவர் ஆதிசங்கரர்.* காளி, மாரியம்மனை அக்கா, தங்கையாக கருதி வழிபடுவர். * அம்பிகையின் திருநாமமான சாகம்பரி என்பதற்கு 'தாவரங்களைக் காப்பவள்' என்பது பொருள். * கங்கையில் பார்வதி நீராடிய போது அவளது காதணி விழுந்த இடம் மணிகர்ணிகா கட்டம்.* மகாகவி காளிதாசர் முதன் முதலில் இயற்றிய பாடல் சியாமளா தண்டகம்.* கேரளத்தில் பகவதியாக வணங்கப்படும் பெண் தெய்வம் கண்ணகி.* மீனாட்சியம்மனுக்கு பெற்றோர் இட்ட பெயர் தடாதகை பிராட்டியார்.* வடக்கு நோக்கி இருப்பதால் வடக்கு வாசல் செல்வி என காளியை அழைப்பர். * மகமாயி என்பதற்கு மகிமை நிறைந்தவள் என்பது பொருள். * நவராத்திரியின் போது நடத்தப்படும் ஹோமம் மகா சண்டி ஹோமம்.* அர்ச்சகர் புடவை கட்டியபடி சிவனை பூஜிக்கும் தலம் திருச்சி திருவானைக்காவல் * வள்ளலாருக்கு அண்ணியாக வந்து உணவளித்தவள் திருவொற்றியூர் வடிவுடையம்மன்.* மகிஷாசுரனை வதம் செய்த அம்பிகையை போற்றும் பாடல் மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம்.* புரட்டாசியில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி.