உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* பாஞ்சஜன்யம் என்னும் சங்கின் அம்சமாக பிறந்தவர் பொய்கையாழ்வார். * பூமிதேவியின் அம்சமாக பிறந்த பெண் ஆழ்வார் ஆண்டாள்.* மகாவிஷ்ணுவின் சாரங்கம் என்னும் வில்லின் அம்சமாக பிறந்தவர் திருமங்கையாழ்வார்* நம்மாழ்வரை குருநாதராக ஏற்றவர் மதுரகவியாழ்வார். இவரால் பாடப்பட்ட பாடல் கண்ணிநுண் சிறுதாம்பு.* திருப்பதியில் ஏழுமலையான் முன் படியாக இருப்பவர் குலசேகராழ்வார்.* ஸ்ரீரங்கநாதரை மட்டுமே பாடிய ஆழ்வார் திருப்பாணாழ்வார்.* சிவத்தலங்களில் 'கோயில்' என்றால் அது சிதம்பரத்தை குறிக்கும்.* கைலாயத்தில் சிவதரிசனத்திற்கு அனுமதிப்பவர் நந்திதேவர்.* சிவ சின்னங்களில் முதலிடம் வகிப்பது திருநீறு.* ருத்ராட்சம் என்பதன் பொருள் சிவனின் கண்.* காளை மாடு சிவனை பூஜித்த தலம் திருவையாறு.* தேவர்கள் சிவராத்திரியன்று வழிபடும் திருக்கோலம் லிங்கோத்பவர்.* மதுரையில் சித்தராக எழுந்தருளியவர் சுந்தரானந்தர். 'எல்லாம் வல்ல சித்தர்' என்றும் இவரை அழைப்பர்.* பஞ்சபூத தலங்களில் நீருக்குரியது திருவானைக்காவல்.* உயிர்களைக் காப்பதற்காக சிவன் ஆடிய நடனம் சந்தியா தாண்டவம்.* ஆதிசங்கரர் நிறுவிய முக்திலிங்கம் கேதார்நாத்தில் உள்ளது.