சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
UPDATED : ஏப் 21, 2014 | ADDED : ஏப் 21, 2014
1. கண்ணன் மதுராவில் இருந்து, துவாரகை செல்ல காரணமானவன்.... ஜராசந்தன் 2. ராமனை நேரில் கண்ட தியாகராஜர் பாடிய கீர்த்தனை....... பால கனகமய...... 3. தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன்(உயிர்) சிவலிங்கம் என்று கூறியவர்...... திருமூலர் 4. பெண் வயிற்றில் பிறக்காத அபூர்வ மகான்களை ......என்பர் அயோநிஜப் பிறவிகள் 5. பாண்டவர்களில் ஜோதிட நிபுணராக இருந்தவர்..... சகாதேவன் 6. நவக்கிரகங்களில் ஒன்றான குருவுக்கு உரிய ரத்தினம் ..... புஷ்பராகம் 7. அம்பாள் மீது சியாமளா தண்டகம் பாடியவர்......... மகாகவி காளிதாசர் 8. சாஷ்டாங்க நமஸ்காரத்தை தமிழில் ..... என குறிப்பிடுவர் தண்டனிடுதல்9. பிருந்தா என்பதன் பொருள்......... துளசி 10.திருப்பாணாழ்வாரை தோளில் சுமந்தவர்...... லோக சாரங்கர்