சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
UPDATED : மே 20, 2014 | ADDED : மே 20, 2014
1. சிதம்பரத்தில் கொடிக்கவி (கொடியேற்ற பாட்டு) பாடியவர்.....உமாபதி சிவம்2. தருமபுரம் சைவ மடத்தை நிறுவியவர்......குருஞான சம்பந்தர்3. சிவனருளால் கண்பார்வை பெற்ற அருளாளர்....சுந்தரர்4. அப்பரை குருவாக ஏற்று வாழ்ந்த அடியவர்......அப்பூதியடிகள்5. மதுரைக்கு புறப்படும் முன் சம்பந்தர் பாடிய பதிகம்.....கோளறு பதிகம் 6. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.....ஜி.யு. போப்7. தொண்டரடிப்பொடியாழ்வாரின் இயற்பெயர்.....விப்ர நாராயணர்8. தினமும் 1008 அடியார்களுக்கு அமுது (அன்னதானம்)இட்டவர் ....திருமங்கையாழ்வார்9. நந்தவனம் வைத்து காஞ்சி வரதருக்கு தொண்டு செய்தவர்.....திருக்கச்சிநம்பிகள்10. ராமானுஜருக்கு பாஷ்யக்காரர் (உரையாசிரியர்) என்ற பட்டம் கொடுத்தவள்.......சரஸ்வதி