சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
UPDATED : ஜூலை 08, 2014 | ADDED : ஜூலை 08, 2014
1. கம்பருக்கு பொருளுதவி செய்த வள்ளல்....... சடையப்பர் 2. நக்கீரர் முருகன் மீது பாடிய நூல்....... திருமுருகாற்றுப்படை 3. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.... ஜி.யு.போப் 4. கோசலையாக மாறி ராமனைத் தாலாட்டியவர்...... குலசேகராழ்வார் 5. அமைச்சராக இருந்த போது மாணிக்க வாசகருக்குரிய பட்டம்..... தென்னவன் பிரம்மராயன் 5. மீனாட்சிக்கு முருகனின் அம்சத்தோடு பிறந்தவர்...... உக்கிர குமார பாண்டியன் 6. மகதி யாழ் என்னும் வீணை இசைப்பவர்...... நாரதர் 7. சிவன் மீது சேரமான் பெருமாள் பாடியது........ திருக்கைலாய ஞான உலா 8. பாலறாவாயர் என்று குறிப்பிடப்படுபவர்..... திருஞானசம்பந்தர் 9. காசிப முனிவர், திதிக்குப் பிறந்த பிள்ளைகள்... தைத்தியர்கள் 10. மன்னர் நரசிங்க முனையரால் வளர்க்கப்பட்டவர்....... சுந்தரர்