சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
UPDATED : ஜூன் 02, 2015 | ADDED : ஜூன் 02, 2015
1. பக்த ரத்தினம் எனப் போற்றப்படுபவர்......ஆஞ்சநேயர்2. வைகுண்டத்தை தமிழில்......... என குறிப்பிடுவர்.திருநாடு3. கிருஷ்ணருக்கு கோவிந்த பட்டாபிஷேகம் செய்து வைத்தவர்......இந்திரன்4. 'துவாதச நாமம்' என போற்றப்படும் 12 எழுத்து மந்திரம்.....ஓம் நமோ பகவதே வாசுதேவாய5. ஹயக்ரீவரை நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்......நிகமாந்த மகாதேசிகன்6. சம்பந்தர் பிறந்த ஊர்...சீர்காழி7. தியாகராஜர் பூஜித்த சீதாராம விக்ரகம்......ஸ்ரீராம பஞ்சாயதன்8. சடாரியில் வீற்றிருக்கும் ஆழ்வார்.......நம்மாழ்வார்9. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர்.....நாதமுனிகள்10. சப்தாஸ்வன் என்பவர் யார்?ஏழுகுதிரை பூட்டிய தேரில் வரும் சூரியன்