உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

1. விநாயகர் கையிலுள்ள மாவு உருண்டை.........மோதகம்2. மோதகம் என்பதன் பொருள்........ஆனந்தம் அளிப்பது3. விபூதி என்பதன் அர்த்தம்.......மேலான செல்வம்4. திருநீற்றுக்குரிய மந்திரப் பெயர்.......பஞ்சாட்சரம் 5. 'மந்திரமாவது நீறு' எனத் துவங்கும் திருநீற்றுப்பதிகம் பாடியவர்.........ஞான சம்பந்தர்6. திருநீற்றுப்பதிகம் யாரைக் குறித்து பாடப்பட்டது.......மதுரை சுந்தரேஸ்வரர்7. சம்பந்தரால் கூன் நிமிர்த்தப்பட்ட மன்னர்......கூன்பாண்டியன் என்னும் நின்றசீர் நெடுமாறன்8. எங்கு சுற்றினாலும் யாரை சேவிக்க வேண்டும் என்பர்?ஸ்ரீரங்கம் ரங்கநாதரை...9. அரியர்த்தர் என்பது யாரைக் குறிக்கும்?சங்கர நாராயணர்10. மகாபாரதம் எழுதிய வியாசரின் பெற்றோர்........பராசரர், சத்தியவதி.