உள்ளூர் செய்திகள்

கீதை காட்டும் பாதை

ஸ்லோகம்ஸ்பர்ஸாந்க்ருத்வா பஹிர்பாஹ்யாம்ஸ் சக்ஷுஸ்சைவாந்தரே ப்ருவோ:!ப்ராணாபாநெள ஸமெள க்ருத்வா நாஸாப் யந்தர சாரிணெள!!யதேந்த் ரியமநோபுத்திர் முநிர்மோக்ஷ பராயண:!விக தேச்சாபயக்ரோதோ ய: ஸதா முக்த ஏவஸ:!!பொருள்வெளியுலக விஷயங்கள் பற்றிச் சிந்திக்காமல் பார்வையை புருவங்களுக்கு நடுவில் செலுத்தியும், மூச்சுக்காற்றை சமமாக்கியும் வாழும் ஒருவனுக்கு ஐம்புலன்களும், மனமும் அடங்கும். ஆசை, பயம், கோபத்தில் இருந்து அவன் முற்றிலும் விடுபடுவான். மோட்சம் அடைவதில் ஈடுபாடு கொண்டு கடவுளை மட்டுமே சிந்திக்கும் முனிவனான அவன் விடுதலைப் பெற்றவனாக வாழ்வான்.