திருவாசகம் - பாடல் - 153 - மாணிக்க வாசகர் பாடுகிறார்
வான்வந்த தேவர்களும் மால்அயனோடு இந்திரனும்கானின்று வற்றியும் புற்றெழுந்தும் காண்பரியதான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டுஊன்வந்து உரோமங்கள் உள்ளே உயிர்ப்பு எய்துதேன்வந்து அமுதின் தெளிவின் ஒளிவந்தவான்வந்த வார்கழலே பாடுதும்காண் அம்மானாய்!பொருள்: சிவபெருமானே! வானுலக தேவர்களும், திருமாலும், பிரம்மாவும், இந்திரனும் காட்டில் தவம் செய்து உடல் இளைத்துப் போயினர். அவர்களது உடலை புற்றும் மூடி விட்டது. இருந்தாலும், உன்னுடைய காட்சியை அவர்களால் பெற முடியவில்லை. நானோ நாய் போல கேடு கெட்டவன். ஆனால், என்னை ஒரு பொருட்டாக மதித்து, பெற்ற தாய் போல பேரன்பு காட்டினாய். உன்னைக் கண்டு உடலில் ரோமங்கள் சிலிர்த்து நின்றன. உள்ளொளி பெருகி அமுதம் பெருகியது. இப்படி ஆனந்த பரவசம் தந்த இறைவனைப் போற்றி அம்மானை ஆடுவோம். விளக்கம்: அம்மானை என்பது பெண்கள் ஆடும் நடன வகைகளில் ஒன்று.