திருவாசகம் - மாணிக்க வாசகர் பாடுகிறார்
UPDATED : மார் 30, 2012 | ADDED : மார் 30, 2012
பூமேல் அயனோடு மாலும் புகலரிதென்றுஏமாறி நிற்க அடியேன் இறுமாக்கநாய்மேல் தவிசிட்டு நன்றாய்ப் பொருட்படுத்ததீமேனி யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ!பொருள்: தாமரைப் பூவில் வாழும் பிரம்மா, திருமால் இருவராலும் கூட அறியமுடியாதவன் சிவன். ஆனால் இழிந்த நாயையும் மதித்து உயர்ந்த ஆசனம் அளித்தது போல என்னையும் ஒரு பொருளாக ஏற்று அருள் புரிந்தான். அரச வண்டே! தீயைப் போல சிவந்தவனான ஈசனின் திருவடிகளை அடைந்து பாடுவாயாக.