திருவாசகம் - மாணிக்க வாசகர் பாடுகிறார்
UPDATED : ஏப் 06, 2012 | ADDED : ஏப் 06, 2012
இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமேதுணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்அணையார் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோபொருள்: சிவனே! உன் இரு பாதங்களையும் என் தலை மீது வைத்து அருள்செய்தாய். இதுநாள் வரையில் துணை என்று இருந்த உறவுகளை விட்டு நீங்கிவிட்டேன். நீர் வளம் மிக்க தில்லையம்பலத்தில் நடனமாடுகின்றவனே! பிறவிக்கடலில் தோணியாக வருபவனே! உன் பெருமைகளைப் பாடியபடியே பூக்களைப் பறிப்போம்.