திருவாசகம் பாடல் 172 - மாணிக்க வாசகர் பாடுகிறார்
UPDATED : மே 27, 2011 | ADDED : மே 27, 2011
சுந்தர நீறணிந்தும் மெழுகித்தூய பொன்சிந்தி நிதிபரப்பிஇந்திரன் கற்பகம் நாட்டி எங்கும்எழில் சுடர் வைத்துக் கொடி எடுமின்அந்தரர் கோன்! அயன்தன் பெருமான்ஆழியான் நாதன்! நல்வேலன் தாதை!எந்தரம் ஆளுமையாள் கொழுநற்குஏயந்த பொற்சுண்ணம் இடித்து நாமே!பொருள்: அழகு தரும் திருநீற்றைப் பூசுங்கள். தரையை மெழுக்கி தூய்மைப்படுத்துங்கள். பொன்னும்மணியும் தூவுங்கள். நவநிதிகளைப் பரப்புங்கள். இந்திரனின் கற்பகமரத்தை நட்டுவிடுங்கள். எங்கும் அழகு தரும் சுடர் விளக்கேற்றுங்கள். மங்கல கொடிகளை நாட்டுங்கள். பிரம்மா, விஷ்ணு முதலிய தேவர்களின் தலைவனும், முருகப்பெருமானினத் தந்தையும், உமையவளின் கணவனும், எமை ஆளும் நாயகனுமாகிய சிவபெருமானுக்கு நறுமணம் மிக்க மஞ்சனப்பொடியை பெண்களாகிய நாம் இடித்து மகிழ்வோம்.