விரதம் என்றால் இதுவே
UPDATED : அக் 29, 2021 | ADDED : அக் 29, 2021
* ஒரு உயிரை கொன்று சாப்பிடாமல் இருப்பதே விரதம். * பெற்றோரே கண்கண்ட தெய்வம். * கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குவது நல்லது.* குடும்ப வாழ்க்கையே நன்மை தரும். * ஊராரை பகைத்துக் கொள்ளாதே. * பிச்சை எடுத்தாவது நல்லதை செய். * சிக்கனமாக இருந்து செல்வத்தை தேடு. * உனக்கு கிடைக்காததை மறந்து விடு. * கடல் கடந்தாவது பொருள் தேடு. * சிறந்த உணவாக இருந்தாலும் காலம் அறிந்து சாப்பிடு. * கொடுத்த வாக்கை காப்பாற்று. * உன்னை விட தாழ்ந்தவரிடமும் அன்பாக பேசு. * வரவு அறிந்து செலவு செய். * சிறிய செயலாக இருந்தாலும் யோசித்து செய். * தெரிந்தும் தெரியாது மாதிரி இருப்பதே பெண்களுக்கு அழகு. * நிதானமாக ஒரு செயலை செய். * தினமும் காலை எழுந்தவுடன் கடவுளை வணங்கு.விளக்கம் தருகிறார் அவ்வையார்