உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

ஸாஸ்தாரம் ஜகதாம் ப்ரபன்ன ஜனதாஸம்ரக்ஷணே தீக்ஷிதம்த்ராதாரம் ஸகலாத்பயாத்ஹரி ஹரப்ரேமாஸ்பதம் ஸாஸ்வதம்!கந்தாரம் நிஸிரக்ஷணாயகரிராட்வாஹம் த்ருதம் ÷க்ஷமதம்ப்ரத்யக்ஷம்து கலௌத்ரியம்பகபுராதீஸம் பஜே பூதயே!!பொருள்: உலகத்தைக் காப்பவரே! தன்னை வணங்குபவர்களின் உறவுகளையும் காக்கும் தன்மை கொண்டவரே! பயம் போக்குபவரே! விஷ்ணு, சிவன் ஆகிய இருவரின் அன்புக்குரியவரே! அழிவற்றவரே! இரவுவேளையில் தன்னை நாடி வரும் பக்தர்களைக் காப்பதற்காக உடன் செல்பவரே! யானையில் பவனி வருபவரே! நன்மையை விரைவாக அருள்பவரே! கலியுகத்தின் கண்கண்ட தெய்வமே! த்ரியம்பகபுரம் என்ற ÷க்ஷத்திரத்தின் ஈஸ்வரனே! மஹாசாஸ்தாவே! உம்மை வணங்குகிறேன்.·