உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே!ஸங்க ஸக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே!!பொருள்: மகாமாயையாக ஸ்ரீபீடத்தில் வீற்றிருந்து உலகத்தை பரிபாலிக்கும் மகாலட்சுமித்தாயே! சங்கு, சக்கரம், கதாயுதங்களை ஏந்தியிருப்பவளே! உன்னைப் போற்றி வணங்குகிறேன். மனப்பாடப்பகுதிபாதம் நாளும் பணிய தணியும் பிணிஏதம் சாரா; எனக்கேல் இனி என் குறை?வேதநாவர் விரும்பும் திருக்கண்ணபுரத்துஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே.பொருள்: வேதம் உரைக்கும் அன்பர்கள் போற்றும் திருக்கண்ணபுரத்து எம்பெருமான் உலகிற்கே முதல்வனாக விளங்குகிறான். அப்பெருமானின் திருவடிகளை தினமும் பணிந்திட நோய்நொடிகள் விலகி ஓடும். துன்பம் நேராது. வாழ்வில் ஒரு குறைவும் உண்டாகாது.