இந்த வார ஸ்லோகம்!
UPDATED : ஆக 22, 2014 | ADDED : ஆக 22, 2014
ஸ்ரீ கண்ட ப்ரேம புத்ராய கௌரீ வாமாங்க வாஸிநே!த்வாத்ரிம் ஸத்ருபயுக்தாய ஸ்ரீ கணேஸாய மங்களம்!!ஆதிபூஜ்யாய தேவாய தந்த மோதக தாரிணே!வல்லபா ப்ராண காந்தாய ஸ்ரீ கணேஸாய மங்களம்!!பொருள்: நீலகண்டரின் அன்பு மகனே! அம்பிகையின் இடது மடியில் அமர்ந்திருப்பவனே! 32 கோலங்களில் காட்சி தருபவனே! முதலில் வழிபடப்படுபவனே! தேவாதி தேவனே! தந்தம், கொழுக்கட்டை ஏந்தியவனே! வல்லபையின் அன்புக்குரியவனே! மகா கணபதியே! உனக்கு மங்களம் உண்டாகட்டும்.