இந்த வார ஸ்லோகம்!
UPDATED : செப் 26, 2014 | ADDED : செப் 26, 2014
காதம் பப்ரமதா விலாஸ கமனாம் கல்யாண காஞ்சீரவாம்கல்யாணாசல பாதபத்ம யுகளாம் காந்த்யா ஜ்வலந்தீம் ஸுபாம்!கல்யாணாசல கார்முக ப்ரியதமாம் காதம்ப மாலா ஸ்ரயாம்காமாக்ஷீம் கலயாமி கல்பலதிகாம் காஞ்சீபுரீ தேவதாம்!!பொருள்: அன்னநடை பயில்பவளே! மங்களகரமான ஆபரணங்களால் ஒலி எழுப்புபவளே! மங்களம் நிறைந்த திருவடிகளைப் பெற்றவளே! பிரகாசம் கொண்டவளே! சுபம் அருள்பவளே! மேருமலையை வில்லாக வளைத்த சிவனின் அன்புக்குரிய மனைவியே! கதம்ப மலர் மாலை அணிந்தவளே! கற்பக தரு போல வேண்டும் வரம் தருபவளே! காஞ்சிபுரத்தில் வாழ்பவளே! காமாட்சித்தாயே! உன்னைப் போற்றுகிறேன்.