இந்த வார ஸ்லோகம்!
UPDATED : மே 26, 2015 | ADDED : மே 26, 2015
கனகாம்பர ஸம்சோபி கடயே கலிஹாரிணே!கமலாபதி வந்த்யாய கார்த்திகேயாய மங்களம்!!பொருள்: பொன்னிறப் பட்டாடை உடுத்திய இடுப்பைப் பெற்றவரே! கலிதோஷம் அகற்றுபவரே! லட்சுமியின் துணைவரான திருமாலால் போற்றப் படுபவரே! கார்த்திகைப் பெண்கள் வளர்த்த கார்த்திகேயனே! உமக்கு மங்களம் உண்டாகட்டும்.குறிப்பு: சுப்பிரமணிய மங்களாஷ்டக ஸ்லோகம்.