உள்ளூர் செய்திகள்

திருவாசகம் - மாணிக்கவாசகர் பாடியது

தனித்துணை நீநிற்க யான் தருக்கிக்தலையால் நடந்தவினைத் துணையேனை விடுதி கண்டாய்!வினையேன் உடைய மனத்துணையே! என்தன் வாழ்முதலே!எனக்கு எய்ப்பில் வைப்பே!தினைத் துணையேனும் பொறேன் துயர்ஆக்கையின் திண் வலையே!பொருள்: விதிப்பயனால் துன்பப்படும் என் மனதிற்கு தக்க வழித்துணையாக வருபவனே! உயிருக்கு உயிராகத் திகழ்பவனே! துன்பத்தில் வாடும்போது வைப்புநிதி போல் கைகொடுத்து உதவுபவனே! முதல்வனாக நீ துணையிருந்தும், நான் என்னும் ஆணவத்தால் தடுமாறி நிற்கிறேன். உடம்பு என்னும் வலைக்குள் சிக்கி கிடப்பதை இனியும் பொறுக்க முடியாது. பாவவினையில் அழுந்திக் கிடக்கும் என்னைப் புறக்கணித்து விடாதே.