உள்ளூர் செய்திகள்

துயரம் தீர்க்கும் துர்கையை நம்பு!

ஓம் துர்கையே போற்றிஓம் அன்னையே போற்றிஓம் அக்னீஸ்வரியே போற்றிஓம் அஷ்டமி நாயகியே போற்றிஓம் அவதுாறு ஒழிப்பவளே போற்றிஓம் அசுரர்க்கு எமனே போற்றிஓம் அன்பருக்கு எளியவளே போற்றிஓம் அமரரைக் காப்பவளே போற்றிஓம் அகிலாண்ட நாயகியே போற்றிஓம் அறக்காவலே போற்றிஓம் அபய கரத்தாளே போற்றிஓம் ஆதார சக்தியே போற்றிஓம் இறைவியே போற்றிஓம் இச்சா சக்தியே போற்றிஓம் ஈர்ப்பவளே போற்றிஓம் ஈடிலாளே போற்றிஓம் உக்கிர தேவதையே போற்றிஓம் உன்மத்தபங்கியே போற்றிஓம் எண்கரத்தாளே போற்றிஓம் எட்டாக் குழலியே போற்றிஓம் எலுமிச்சை விரும்பியே போற்றிஓம் எதிர்ப்பைக் குலைப்பவளே போற்றிஓம் ஏழ்மை அகற்றுபவளே போற்றிஓம் ஏவல் குலைப்பவளே போற்றிஓம் ஒளிர்பவளே போற்றிஓம் ஓங்காரியே போற்றிஓம் கம்பீர உருவமே போற்றிஓம் கவலையறச் செய்பவளே போற்றிஓம் காளியே போற்றிஓம் கதாயுத தாரியே போற்றிஓம் காபாலியே போற்றிஓம் காப்பவளே போற்றிஓம் கிரிதுர்க்கையே போற்றிஓம் கிருஷ்ண சோதரியே போற்றிஓம் குமாரியே போற்றிஓம் குறுநகையளே போற்றிஓம் குங்குமப்பிரியையே போற்றிஓம் குலக்காவலே போற்றிஓம் கிரியாசக்தியே போற்றிஓம் கோள்வினை தீர்ப்பவளே போற்றிஓம் சண்டிகேஸ்வரியே போற்றிஓம் சர்வசக்தியே போற்றிஓம் சந்தனப்பிரியையே போற்றிஓம் சர்வாலங்காரியே போற்றிஓம் சாமுண்டியே போற்றிஓம் சர்வாயுதாரியே போற்றிஓம் சிவதுர்கையே போற்றிஓம் சினவேல் கண்ணியே போற்றிஓம் சிம்ம வாஹினியே போற்றிஓம் சித்தியளிப்பவளே போற்றிஓம் சியாமளையே போற்றிஓம் சீதளையே போற்றிஓம் செம்மேனியளே போற்றிஓம் செவ்வண்ணப்பிரியையே போற்றிஓம் ஜெயதேவியே போற்றிஓம் ஜோதிக்கனலே போற்றிஓம் ஞானசக்தியே போற்றிஓம் ஞானக்காவலே போற்றிஓம் தற்பரமே போற்றிஓம் தயாபரியே போற்றி ஓம் திருவுருவே போற்றி ஓம் திரிசூலியே போற்றிஓம் தீதழிப்பவளே போற்றிஓம் தீனர் காவலே போற்றிஓம் துட்டர்க்குத் தீயே போற்றிஓம் துர்க்கனை அழித்தவளே போற்றிஓம் துக்கம் தீர்ப்பவளே போற்றி ஓம் நலமளிப்பவளே போற்றிஓம் நந்தர்குலக்கொழுந்தே போற்றிஓம் நவசக்தியே போற்றிஓம் நவகோணம் உறைபவனே போற்றிஓம் நிமலையே போற்றிஓம் நிலவணிந்தவளே போற்றிஓம் நிறைவே போற்றிஓம் நிறைந்தவளே போற்றிஓம் படைத்தவளே போற்றிஓம் பாலிப்பவளே போற்றிஓம் பயிரவியே போற்றிஓம் பய நாசினியே போற்றிஓம் பிரம்மசாரிணியே போற்றிஓம் பயங்கரியே போற்றிஓம் புவனேஸ்வரியே போற்றிஓம் பூஜிக்கப்படுபவளே போற்றிஓம் மலநாசினியே போற்றிஓம் மகிஷாசுரமர்த்தினியே போற்றிஓம் மங்கல வடிவே போற்றி ஓம் மகேஸ்வரியே போற்றிஓம் மங்கையர்க்கரசியே போற்றிஓம் மகவளிப்பவளே போற்றிஓம் மாதர் துணையே போற்றிஓம் மாங்கல்யம் காப்பவளே போற்றிஓம் முக்கண்ணியே போற்றிஓம் முக்தியளிப்பவளே போற்றிஓம் மூத்தவளே போற்றிஓம் மூலப்பொருளே போற்றிஓம் மூவுலகத்தாயே போற்றிஓம் மூவுலகும் வென்றவளே போற்றி ஓம் யசோதை புத்ரியே போற்றிஓம் யமபயம் தீர்ப்பவளே போற்றிஓம் ராகுகால தேவதையே போற்றிஓம் ரெளத்திரியே போற்றிஓம் வல்லவளே போற்றிஓம் வாராகியே போற்றிஓம் வீர உருவமே போற்றிஓம் விஷ்ணு துர்கையே போற்றிஓம் வையம் காப்பவளே போற்றிஓம் வைஷ்ணவியே போற்றிஓம் வெற்றியளிப்பவளே போற்றி போற்றி