உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் என்ன

ஜன.12 மார்கழி 28: விநாயக சஷ்டி, சஷ்டி விரதம், முருகனுக்கு அபிேஷகம், நெல்லை, குன்றக்குடி, பழநி, திருச்சுழி, காளையார்கோவில், சுவாமிமலை கோயில்களில் தைப்பூச உற்ஸவம் ஆரம்பம், ஸ்ரீவி., ஆண்டாள் சுந்தரராஜர் திருக்கோலம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் கைலாச, காமதேனு வாகனம், விவேகானந்தர் பிறந்தநாள்.ஜன.13 மார்கழி 29: வாயிலார் நாயனார் குருபூஜை, மதுரை மீனாட்சி சொக்கநாதர் வெள்ளி சிம்மாசனம், ஸ்ரீவி., ஆண்டாள் கனக தண்டியல், காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள், திருச்சேறை சாரநாதர் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம், திருப்பரங்குன்றம் முருகன் சைவ சமய ஸ்தாபித லீலை.ஜன.14 மார்கழி 30: போகி, ஸ்ரீவி., ஆண்டாள் ஆளேறும் பல்லாக்கு, திருப்பரங்குன்றம் முருகன் ரத்தின சிம்மாசனம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் குதிரை வாகனம், திருச்சேறை சாரநாதர் வேணுகோபாலர் திருக்கோலம், கடலுார் நல்லாத்துார் வரதராஜர் கோயில் ஆண்டாள் திருக்கல்யாணம்.ஜன.15 தை 1: பொங்கல், பொங்கல் வைக்க நல்ல நேரம் காலை 7:30 - 8:30 மணி, உத்ராயண புண்ணிய காலம், சிவாலயங்களில் அயன தீர்த்தம், நெல்லை நெல்லையப்பர் நெல்லுக்கு வேலி கட்டிய லீலை, மதுரை மீனாட்சி சொக்கநாதர் கல்யானைக்கு கரும்பு கொடுத்த லீலை, ஸ்ரீவி., ஆண்டாள் கதிரறுப்பு விழா, காஞ்சி உலகளந்த பெருமாள் கருட சேவை, கரிநாள்.ஜன.16 தை 2: மாட்டுப்பொங்கல், கார்த்திகை விரதம், ஸ்ரீவி., ஆண்டாள் முத்துக்குறி கண்டருளல், மதுரை மீனாட்சி சொக்கநாதர் நந்தீஸ்வரர் , யாளி வாகனம், காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பரிவேட்டைக்கு எழுந்தருளல், திருப்பரங்குன்றம் முருகன் வைரத்தேர், கரிநாள்.ஜன.17 தை 3: ஏகாதசி விரதம், திருப்பரங்குன்றம் முருகன் தெப்பம், குன்றக்குடி சிவன் தங்கத் தேர், மதுரை மீனாட்சி சொக்கநாதர் வலைவீசியருளல், கோவை பாலதண்டாயுதபாணி யாளி வாகனம், கரிநாள்.ஜன.18 தை 4: பிரதோஷம், மாலை 4:30 - 6:00 மணிக்கு நந்தீஸ்வரர் அபிேஷகம், கண்ணப்பநாயனார் குருபூஜை, கோவை பாலதண்டாயுதபாணி அன்ன வாகனம், காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் தேர், மதுரை மீனாட்சி சொக்கநாதர் சப்தாவர்ணம், திருச்சேறை சாரநாதர் திருக்கல்யாணம்.