உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் என்ன

மார்ச் 30 பங்குனி 16: சீதாதேவி விரதம், உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப்பெருமாள் காலையில் வெண்ணெய்த்தாழி சேவை, இரவு வெள்ளிக் குதிரையில் வேடர்பரி லீலை, மன்னார்குடி ராஜகோபால சுவாமி கண்ட பேரண்ட பட்சிராஜன் அலங்காரம்.மார்ச் 31 பங்குனி 17: முகூர்த்த நாள், ஏகாதசி, திருவோண விரதம், திருவெள்ளறை சுவேதாத்ரி நாதர் தேர், உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் தேசிகருடன் தேருக்கு எழுந்தருளல், இரவு புஷ்பாங்கி சேவை, தாயமங்கலம் முத்துமாரியம்மன் சிம்ம வாகனம். ஏப்.1 பங்குனி 18: முகூர்த்த நாள், திருநெல்வேலி டவுன் கரியமாணிக்கப் பெருமாள் பங்குனி உற்ஸவம் ஆரம்பம், ஒழுகை மங்கலம் மாரியம்மன் யாளி வாகனம், உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் சப்தாவர்ணம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் சிம்ம வாகனம். ஏப்.2 பங்குனி 19: பிரதோஷம், தண்டியடிகள் குருபூஜை, தாயமங்கலம் முத்துமாரியம்மன் காமதேனு வாகனம், ஒழுகை மங்கலம் மாரியம்மன் புஷ்ப படிச்சட்டத்தில் பவனி, அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் உற்ஸவம் ஆரம்பம், திருவெள்ளறை சுவேதாத்ரி நாதர் ஆளேறும் பல்லக்கில் வீதியுலா, கரிநாள்.ஏப்.3 பங்குனி 20: மாத சிவராத்திரி விரதம், கரிவலம் வந்த நல்லுார் பால்வண்ணநாதர் உற்ஸவம் ஆரம்பம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி தங்க சூரிய பிரபை, உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் விடையாற்று உற்ஸவம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் அன்ன வாகனம், ஒழுகை மங்கலம் மாரியம்மன் வெள்ளி காமதேனு வாகனம்.ஏப்.4 பங்குனி 21: அமாவாசை விரதம், மன்னார்குடி ராஜகோபால சுவாமி வெள்ளி சேஷ வாகனத்தில் பரமபத நாதர் திருக்கோலம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் பூதவாகனம், கரிவலம் வந்த நல்லுார் பால்வண்ண நாதர் கேடய சப்பரத்தில் பவனி, ஏரல் அருணாசல சுவாமிகள் திருவிழா.ஏப்.5 பங்குனி 22: பெரிய பெருமாள் திருநட்சத்திரம், திருநெல்வேலி கரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் ஐந்து கருடசேவை, குற்றாலம் குற்றால நாதர் உற்ஸவம் ஆரம்பம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் பொங்கல் விழா, மன்னார்குடி ராஜகோபாலசுவாமி வைரமுடி சேவை, ஒழுகை மங்கலம் மாரியம்மன் புஷ்ப விமானம், சோழவந்தான் ஜெனகை நாராயணப் பெருமாள் உற்ஸவம் ஆரம்பம்.