உள்ளூர் செய்திகள்

தலையெழுத்து

துறவியான தாயுமானவரை சந்திக்க இரு நபர்கள் வந்தனர். அவர்களில் ஒருவர், '' இல்லறம், துறவறம் இதில் சிறந்தது எது'' எனக் கேட்டார். அதற்கு அவர், ''பம்பரம் சுற்றுவதை நீங்கள் பார்த்தது உண்டா'' எனக் கேட்டார். இருவரும் தலையசைத்தனர். ''பம்பரம் தானாக சுற்றுமா... இல்லைதானே. அதுபோல்தான் வாழ்க்கையும். அவரவர் கர்மபலனுக்கு ஏற்ப 'இப்படித்தான் நீ வாழ வேண்டும்' தலையெழுத்தை எழுதி விட்டார் கடவுள். அதன்படி யாருக்கு எது கிடைத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்றார்.