உள்ளூர் செய்திகள்

நம்பினார் கெடுவதில்லை

 காஞ்சி மஹாபெரியவரின் பக்தர் ஒருவர் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். அவருக்கு வயது 65. மனைவிக்கு வயது 60. ஒற்றுமையாக வாழ்ந்தாலும் அவர் பிடிவாத குணம் கொண்டவர். காஞ்சி மடத்திற்கு சுவாமிகளை தரிசிக்க வந்த போது, 'பெரியவா... எங்களுக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவனுக்கு டில்லியிலும், மற்றவனுக்கு கான்பூரிலும் வேலை. இரண்டு பேரும் எங்களை வரச் சொல்றாங்க. ஆனால் இவருக்கு இஷ்டமில்லை. 'அங்க போயி பிள்ளைகளோட நிம்மதியைக் கெடுக்கக் கூடாது'னு பிடிவாதம் பிடிக்கிறார்'' என்றாள் மனைவி. மேலும், 'ஒரு விண்ணப்பம்... இவருக்கு முன்னால சுமங்கலியா நான் போய்ச் சேரணும். பின்னால இவர் கஷ்டப்படக் கூடாது' என வேண்டினாள். 'நீ முன்னாடி போயிட்டா இந்தக் கோபக்காரனை யார் பார்த்துப்பா?' என சொல்லி பிரசாதம் கொடுத்தார்.காமாட்சி அம்மனை தரிசித்து விட்டு புறப்பட்டனர். நாளடைவில் மனமாற்றம் ஏற்பட்டது. 'தஞ்சாவூரை விட்டு நகர மாட்டேன்' என்றிருந்த பக்தர் மூத்த மகன் வீட்டிற்கு மனைவியுடன் சென்றார். ஆறு மாதம் சென்றது. ஒருநாள் பக்தரின் மனைவிக்கு நெஞ்சு வலி ஏற்பட, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது. அன்று ஏகாதசி. உறவினர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது.துயரம் தாங்காமல் தவித்த பக்தரின் உயிர் மறுநாள் துவாதசியன்று பிரிந்தது. இறுதி கடமைகளை மகன்கள் செய்தனர். இரண்டு ஆண்டுக்கு பின் மஹாபெரியவரை தரிசிக்க மூத்த மகன் வந்த போது, 'சுமங்கலியா போகணும்கிற உன் அம்மாவோட ஆசை நிறைவேறிடுச்சு. ஆனால் இறப்பிலும் இருவரும் பிரியலை. ஏகாதசியன்று உன் அம்மா போயிட்டா. அத்துடன் தன் கணவரும் கஷ்டப்படக் கூடாதேனு... மறுநாளே கூட்டிட்டு போயிட்டா... நீயும் பிதுர் காரியங்களை தவறாமல் பண்ணி பெற்றோர் ஆசியைப் பெறு' என்றார் மஹாபெரியவர். நேரில் பார்த்தது போல சுவாமிகள் சொல்வதைக் கேட்ட மகன் வெலவெலத்துப் போனார். நம்பினார் கெடுவதில்லை.காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள். * குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள். * மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள். * தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.பி.சுவாமிநாதன்swami1964@gmail.com