அன்னதானம் ஏன்
காசியில் முகாமிட்ட பின் காஞ்சி மஹாபெரியவர் ராமேஸ்வரம் வந்தார். அங்கு ராமநாதசுவாமி கோயிலில் கங்கா தீர்த்த அபிஷேகம் செய்தார். அதன்பின் கும்பகோணத்தில் உள்ள மடத்திற்கு சென்றார். சாதுர்மாஸ்ய விரத காலம் (நான்கு மாதம்) என்பதால் அங்கேயே தங்கினார். மடத்தில் சந்திரமவுலீஸ்வர பூஜையை நடத்தினார். அதை தரிசித்த பின் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கினார். மடத்தின் சார்பாக தினமும் மூன்று வேளையும் அன்னதானம் நடக்கும். பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் உணவு தயாரிப்பது, பரிமாறுவது, சமையல் கூடத்தை சுத்தம் செய்வது என்பது சவாலாக இருந்தது. வெளியூர் பக்தர்களுடன் உள்ளூர் மக்களும் சேர்ந்ததால் கூட்டம் அலை மோதியது. அதிலும் மதிய சாப்பாடு வாழை இலையில்... பாயாசம், பச்சடி, கறி, கூட்டு, குழம்பு, ரசம், மோர், பொங்கல், புளியோதரை என வகை வகையாக தரப்பட்டன. இரண்டு மாதம் கடந்தது. மூன்றாம் மாத தொடக்கத்தில் கையிருப்பு குறைந்தது. மஹாபெரியவரின் கவனத்திற்கு விஷயம் போனது. 'தினமும் இவ்வளவு பேர் சாப்பிட வருவார்கள் என எதிர்பார்க்கவில்லை. தரிசனத்திற்கு வருபவர்கள் ஏழைகள். அவர்களுக்கு அன்னதானம் அளிப்பது நம் கடமை. மற்ற தானத்தில் வாங்குபவருக்கு திருப்தி உண்டாகாது. இதில் மட்டுமே சாப்பிட்டு முடித்ததும் 'போதும்' என திருப்தியுடன் சொல்வார்கள். மேலும் இது யாகம் செய்த புண்ணியத்தை தரும். மடத்திற்கு பூண்டி வீரய்யா வாண்டையாரை அழைத்து வாருங்கள்'' என்றார். மறுநாள் வாண்டையார் கும்பகோணத்திற்கு வந்து, சுவாமிகளை வணங்கினார். ஆசியளித்த மஹாபெரியவர் மடத்தில் தினமும் அன்னதானம் நடக்கிறது. அரிசி, பருப்பு கொஞ்சம் தான் இருப்பு இருக்கு. அதற்காகவே தகவல் சொல்லி வரவழைத்ததாகச் சொன்னார். 'எஜமான்... உங்களுக்கு எது தேவை என்றாலும் சொல்லி அனுப்புங்கள். தேவையான பொருட்களை தங்களுக்கு அனுப்பி வைக்க காத்திருக்கிறேன்' என வாண்டையார் உறுதியளித்தார். மறுநாள் காலையில் மடத்திற்கு அரிசி, மளிகை சாமான்கள் லாரியில் வந்தன.காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.* மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள்.* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.பி.சுவாமிநாதன் swami1964@gmail.com