உள்ளூர் செய்திகள்

நான் கேட்டேனா...

ஆந்திர மாநில அறநிலையத் துறையில் ஆஸ்தான ஸ்தபதியாக இருந்தவர் கணபதி. இவரை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் சந்தித்தார். அப்போது, ''காஞ்சி காமாட்சியம்மன் கருவறை மேல் உள்ள விமானத்திற்கு தங்க முலாம் பூசுவதற்காக, ஆந்திர அரசிடம் மூன்று கிலோ தங்கம் கேட்டிருந்தார் மஹாபெரியவர். அத்துடன் திருப்பதி தேவஸ்தானமும் ஏழு கிலோ தங்கம் தருவதாகவும் சொல்லி இருந்தனர். இது பற்றி ஆந்திர முதல்வரிடம் பேசி ஏற்பாடு செய்யுங்கள்' என்றார். மஹாபெரியவரின் பக்தரான ஆந்திர முதல்வர் சென்னாரெட்டியை சந்தித்தார் கணபதி. அவரும் தங்கத்தை அனுப்ப சம்மதித்தார். மூன்று கிலோ தங்கத்தை ஆந்திர அதிகாரி காஞ்சி மடத்திற்கு நேரில் தரவும், திருப்பதி தேவஸ்தானம் மூலம் ஏழு கிலோ தங்கத்தை ஒப்படைக்கவும் உத்தரவிட்டார். இதை உடனடியாக காஞ்சி பிரமுகரிடம் போனில் சொன்னார் கணபதி.இதையறிந்த மஹாபெரியவர் உடனடியாக ஸ்தபதியை வரச் சொன்னார். 'தங்கத்தை நான் கேட்டேனா?' என்றார். 'இல்லை' என்றார் ஸ்தபதி. 'என் பெயரை ஏன் சொன்னாய்?' என மஹாபெரியவர் கேட்டார். 'பெரியவா... என்னை மன்னியுங்கள்' என அழுதார். 'தங்கம் வேண்டாம் எனச் சொல்லி விடு' என்றார் மஹாபெரியவர்.உடனடியாக ஆந்திர முதல்வரைச் சந்தித்தார் ஸ்தபதி. ''தங்கம் அனுப்பும் உத்தரவை ரத்து செய்யும்படி காஞ்சி மஹாபெரியவர் தெரிவித்து விட்டார். தயவு செய்து என்னை மன்னியுங்கள்' என கேட்டுக் கொண்டார். அதன்படி முதல்வரும் உத்தரவை திரும்ப பெற்றார். அதன்பின் மடத்திற்கு வந்த ஸ்தபதியிடம், 'நான் சொன்னால் மட்டுமே எந்த வேலையும் செய்ய வேண்டும். என் பெயரைச் சொல்லி யார் கேட்டாலும் செய்ய வேண்டாம்' எனத் தெரிவித்தார் மஹாபெரியவர். பிறருக்கு கொடுப்பவர் பெரியவர். ஆனால் தங்கத்தை கூட வேண்டாம் என மறுத்தவர் நம் மஹாபெரியவர்.காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசனம் செய். * குலதெய்வம் கோயிலில் விளக்கேற்று; உன் கஷ்டம் தீரும்.* முதல் முடிக்காணிக்கையை குலதெய்வத்திற்கு செலுத்து.* உன் முன்னோரை காப்பாற்றிய தெய்வம் உன்னையும் காக்கும்.உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.பி.சுவாமிநாதன்swami1964@gmail.com