உள்ளூர் செய்திகள்

பத்திரமா பாத்துக்கறேன்

காஞ்சி மஹாபெரியவரின் தொண்டர் எசையனுாரைச் சேர்ந்த வேதபுரி. சுவாமிகளுடன் அடிக்கடி யாத்திரை சென்றதால் ஊரில் இருந்த பூர்வீக வீட்டை அவரால் பராமரிக்க முடியவில்லை.ஒருநாள் வேதபுரியிடம், 'எசையனுாரில் உள்ள வீடு எப்படி இருக்கு? நீ போய் பாத்தியா?' எனக் கேட்டார் மஹாபெரியவர். மவுனமாக நின்றார் வேதபுரி. ஆனால் மஹாபெரியவர் அப்படியே விட்டு விடவில்லை. மடத்தில் தொண்டு புரியும் இன்ஜினியர் கோபால் ஐயரை வரவழைத்து, அந்த வீட்டை பார்த்து விட்டு வரச் சொன்னார். மறுநாளே அங்கு சென்று வந்த அவர், 'பெரியவா... வீடு ரொம்ப மோசமாகி இடியும் நிலையில் உள்ளது. கூரையில் உள்ள உத்தரக் கட்டை எல்லாம் உளுத்துப் போய் கொட்டுது' என்றார் கோபால் ஐயர். மஹாபெரியவரின் பார்வை வேதபுரியின் மீது விழுந்தது. 'ஏண்டா... வீடு இப்படி மோசமான கண்டிஷன்ல இருக்குன்னு ஒரு வார்த்தை கூட சொல்லலியே... உத்தரம் யார் தலையிலாவது விழுந்துச்சுன்னா அந்த பாவமும், பழியும் என்னைத் தாண்டா சேரும். உன்னை பத்திரமா பாத்துக்கறேன்னு சொல்லித் தானே கூப்பிட்டு வந்தேன்' என்றார். 'அந்த வீட்டை சரி பண்ணியாகணும். அதுக்கு என்னப்பா செலவாகும்?' என இன்ஜினியர் கோபால் ஐயரிடம் கேட்டார். 'ஐயாயிரம் ரூபாய் செலவாகும் பெரியவா' என்றார் அவர். அதன் பிறகும் சும்மா இருப்பாரா சுவாமிகள்... மடத்திற்கு வரும் பக்தர்களின் உதவியுடன், வீட்டை சரி செய்தார். இது பற்றி யார் அவரிடம் பேசினாலும், மஹாபெரியவரின் கருணையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் விடுவார் வேதபுரி. காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* பூஜைக்கு பயன்படுத்திய பூவை மீண்டும் பயன்படுத்த வேண்டாம். * பெண் தெய்வத்திற்கு கருப்பு நிற ஆடையை சாத்தக்கூடாது. * சாப்பிடும் போது காலணி அணியாதீர்கள். * நோயின்றி வாழ பகலில் துாங்க வேண்டாம். உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!-நாராயணீயம்எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.பி.சுவாமிநாதன்swami1964@gmail.com