உள்ளூர் செய்திகள்

புத்தம் புதுமலரே

சிதம்பரம் நடராஜரின் பக்தரான வியாக்ரபாதர் தினமும் அதிகாலையிலேயே பூப்பறிக்கச் செல்வார். வெளிச்சம் தெரியாததால் அழுகிய பூக்களையும் பறித்து விடுவார். சுவாமிக்கு அணிவித்த பிறகே இது தெரிய வரும். இந்நிலையில் மரத்தில் ஏற வசதியாக புலியின் கால்களும், பார்வைக்காக காலில் கண்களும் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அவ்வாறு இருந்தால் புத்தம்புது மலர்களை பறிக்கலாம் என்பது அவரது எண்ணம். நடராஜரும் அதை நிறைவேற்றினார். இதன் மூலம் காலையில் சுவாமிக்கு பூக்களை அணிவிப்பது சிறப்பு என்பது தெரிகிறது. குடும்பச்சூழல், பணியின் காரணமாக மாலையில் விளக்கேற்றுபவர்கள் மாலையில் பூக்களை அணிவிக்கலாம். எப்போது சூடினாலும் மறுநாள் காலையில் களைந்து விட வேண்டும். காலையிலும், மாலையிலும் பூக்கள் அணிவிப்பது சிறப்பு.