உள்ளூர் செய்திகள்

தண்ணீர்! தண்ணீர்!

திருப்பதி ஏழுமலையானுக்கு அபிேஷகம் செய்ய, அங்குள்ள பாபவிநாச தீர்த்தத்தில் திருமலை நம்பிகள் நீர் எடுப்பது வழக்கம். ஒருநாள் நம்பிகள் மண்குடத்தில் நீர் சுமந்து வந்த போது, வழியில் வில்லும் அம்புமாக வேடனாக தோன்றிய ஏழுமலையான், '' ஐயா! தாகம் தீர தண்ணீர் தருவீரா?'' எனக் கேட்டார். நம்பியோ, '' இது புனிதமான தீர்த்தம். ஏழுமலையானுக்கு உரியது'' என்று சொல்லி நடந்தார். ஆனால் குடத்தின் பின்புறம் அம்பால் துளையிட்டு நீரைக் குடித்தார். இதைக் கண்ட நம்பிகள் மிக வருந்தினார். அப்போது அம்பால் பூமியில் துளைத்து தண்ணீர் பெருகச் செய்து, 'ஆகாச கங்கையான இதிலும் எனக்கு தீர்த்தம் எடுக்கலாம்' என்று சொல்லி சுயரூபம் காட்டினார். ஆகாச கங்கை, பாபவிநாசம் என்னும் இத்தீர்த்தங்களை திருப்பதியில் இன்றும் காணலாம்.