உள்ளூர் செய்திகள்

விலகியது வறுமை

மகாராஷ்டிராவில் உள்ள சதாரா சங்கர மடத்தில் முகாமிட்டிருந்தார் காஞ்சி மஹாபெரியவர். அங்கு ஏழை சாஸ்திரி ஒருவரும், வேதம் படித்த அவரது மகன்களும் பணிபுரிந்தனர். மஹாபெரியவர் அங்கு வரும்போதெல்லம் சாஸ்திரியுடன் சேர்ந்து அவரது மகன்கள் வேத பாராயணம் செய்வர். அதைக் கேட்கும் போது சுவாமிகளின் மனம் குளிரும். அப்போது ஒலிக்கும் வேதமந்திரங்களால் மடத்தை சுற்றி தெய்வீக அலைகள் பரவுவதை எல்லோரும் உணர்வர். இந்நிலையில் சாஸ்திரியின் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த மஹாபெரியவர் விரும்பினார். சாஸ்திரியை அழைத்து, ''இங்கே வர்ற பக்தர்களுக்கு நீ சமைச்சு போடு. அதுக்கு தேவையான பாத்திரம், மளிகை, அரிசி, காய்கறி எல்லாம் வாங்கிக்கோ. பணத்துக்கு ஏற்பாடு பண்றேன்'' என்றார். அவரும் உடனடியாக செயலில் இறங்கினார்.மடத்தில் சாப்பிட்டு விட்டு ஊருக்கு செல்லும் பக்தர்களிடம், 'ஊருக்குப் போறதுக்குத் தேவையான பணத்தை மட்டும் வைச்சுக்கோ... மிச்சத்தை சாஸ்திரிகளிடம் கொடு' என அன்புக் கட்டளையிடுவார் சுவாமிகள். முன்னாள் ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி மடத்திற்கு வந்த போதும், ''உன்னிடம் பணம் இருக்கிறதா?'' எனக் கேட்டார். இரண்டாயிரம் ரூபாய் இருப்பதாக அவர் தெரிவித்தார். ஜாடையால் சாஸ்திரிகளை அருகில் அழைத்து, ''அதை இந்த ஏழைக்குக் கொடு'' என்றார் மஹாபெரியவர். சுவாமிகளின் அருளால் வறுமை அவரை விட்டு விலகியது.காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.* மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள்.* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.பி.சுவாமிநாதன்swami1964@gmail.com