உள்ளூர் செய்திகள்

நம்பிக்கையுடன் செயல்படு

* நம்பிக்கையுடன் முயற்சி செய். வெற்றி உறுதி. * அறிவு, செல்வம், தைரியம் ஆகிய மூன்றும் அவசியம் வேண்டும். * ஒருவர் கஷ்டப்படும்போது அவருக்கு ஆறுதலாக பேசுவதும் தர்மம்தான். * உதவி செய்ய எவ்வளவு பேர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருக்க வேண்டும். * பெற்றோர் தேடிய செல்வத்தில் வாழாதே. சொந்தமாக உழைத்து சாப்பிடு.* எவ்வளவு இடையூறு வந்தாலும் எடுத்த செயலில் உறுதியாக இருப்பதே அழகு. * எதிர்பார்ப்பு இல்லாமல் பிறருக்கு உதவினால் நீயே உயர்ந்தவன். * எந்த ஏற்றத்துக்கும் ஒரு இறக்கம் உண்டு. எந்தத் துன்பத்துக்கும் ஒரு இறுதி உண்டு. * விருந்தினர் போல் நீயும் இந்த உலகில் சிறிது காலமே தங்க வந்திருக்கிறாய். * பெண்களின் பங்களிப்பு இருந்தால்தான் குடும்பம் முன்னேறும். * மனதில் ஆழ்ந்த சிந்தனை எழுந்து விட்டால், லட்சியத்தை அடைவாய். * அறிவைத்தேடிச் செல். செல்வம் தானாக வரும். * கஷ்டம் வரும்போதுதான் பல உண்மைகள் தெரியவரும். * குழந்தைக்கு கல்வியுடன் விளையாட்டையும் சொல்லிக்கொடு. * எதையும் உடனுக்குடன் செய்யும்போது வெற்றி நிச்சயம்.என்கிறார் பாரதியார்