உள்ளூர் செய்திகள்

எல்லாமே உன் கையில்

* ஒன்றை ஆக்குவதும், அழிப்பதும் உன் கையில் தான் உள்ளது. * திறமையான நபர்களிடம் பணியாளராக இருந்தாவது தொழிலை கற்றுக்கொள். * அறியாமை என்பது விஷப்பூச்சி. அது மனதில் புகுந்து விட்டால் மகிழ்ச்சி இருக்காது. * அகங்காரம் என்னும் அசுரனிடம் சிக்கி விட்டால், துன்பத்தை அனுபவிக்க நேரிடும். * இக்கட்டான சூழலில் கட்டுப்பாடு எனும் கடிவாளத்தால் மனதை இழுத்துப் பிடி. * பெரிய கஷ்டங்களை அனுபவித்த பிறகுதான், சில உண்மைகள் புரியவரும். * அதர்மம் இருந்தால் தான் தர்மத்தின் அருமை புரியும். * தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் காண்பவனே உண்மையில் கண்ணுடையவன். * ஒரு செயலை தொடங்குவதற்கு முன், அதன் பயனை இன்னதென்று தெரிந்து கொள். * பிறர் பொருளை அபகரிக்க வேண்டும் என மனதாலும் நினைக்காதே. * நல்லவருடன் பழகு. நல்ல பண்புகளை கற்றுக்கொள்வாய். * ஆசையினால் ஒருவன் குற்றம் செய்கிறான். அதை தவிர்க்க மனவலிமை, விடாமுயற்சி தேவை. * தைரியம் என்பதற்கு துணிவு மட்டுமல்ல, அறிவு என்ற பொருளும் உண்டு. * மனஉறுதியுடன் ஒரு வேலையை செய். அதில் வெற்றி பெறுவாய். * எந்த ஏற்றத்துக்கும் ஓர் இறக்கம் உண்டு. எந்தத் துன்பத்துக்கும் ஒரு இறுதி உண்டு.என்கிறார் பாரதியார்