அரைகுறை அறிவு ஆபத்தானது
* அரைகுறை அறிவு ஆபத்தானது. விடாமுயற்சி உன்னிடம் இருந்தால் முழுஅறிவு பெற்று தெளிவுடன் வாழலாம். * கடவுளை வணங்கும் ஆத்திகம் அவரது ஒரு பக்கத்தைக் காட்டுகிறது. எதிர்க்கும் நாத்திகம் மறுபக்கத்தைக் காட்டுகிறது. * எந்தப் பணியில் ஈடுபட்டாலும், அதை கடவுளுக்கு அர்ப்பணிக்கும் உணர்வுடன் செய்யுங்கள். அதுவே தியானமாக மாறி பலனளிக்கும். * புறவாழ்வில் ஏற்படும் இன்ப துன்பம், மான அவமானம், புகழ் இகழ் அனைத்தையும் சமநிலையோடு ஏற்றுக் கொள்ளுங்கள். * சாந்தி என்பது மனம் எப்போதும் துாய்மையாக இருப்பதாகும். மன அமைதியே வலிமை, ஆனந்தம், ஞானம் அனைத்திற்கும் அடிப்படையானது.* பனையளவு பாவம் செய்திருப்பவனும் கூட தினையளவு நன்மை செய்யத் தொடங்கி விட்டால், கடவுளின் அன்பைப் பெறும் தகுதி வந்து விடும். * மனித குல தலைவனாக இருக்க விரும்புபவன், மனித குலத்தின் அடிமையாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் அனைவரின் அன்புக்கு பாத்திரமாக முடியும்.* கடவுளின் அடிமையாக இருங்கள். அதுவே மேலான இன்பம். அவர் நம்மைக் கைவிட்ட நிலையில் வாழ்வது என்பது நரக இருளை விடக் கொடுமையானது.எச்சரிக்கிறார் அரவிந்தர்