நிம்மதியான வாழ்க்கை அமைய...
UPDATED : ஏப் 06, 2023 | ADDED : ஏப் 06, 2023
மார்ச் 28 - நினைவு நாள்* தேவைகளை குறைத்தால் நிம்மதியான வாழ்க்கை அமையும். * மனத்தை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கும்.* உணவில் எளிமை, உழைப்பில் கடுமை, ஒழுக்கத்தில் உயர்வு என்பதே உத்தமர் இயல்பு.* பணத்திற்கும், பண்பிற்கும் நடக்கும் போட்டியில், பண்பை காப்பாற்ற உறுதி வேண்டும். * மனதில் உருவாகும் ஒழுங்கற்ற எண்ணமே உனக்கு முதல் எதிரி.* ஆசையை அடியோடு ஒழிக்க வேண்டாம், அதை சீரமைத்தாலே போதும்.* அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு. அறிவால் உணர்ச்சியை வெல்வது தான் உயர்வு.* எந்த நிலையிலும் கோபம் வராவிட்டால், ஞானம் பெற்றதாக அர்த்தம். * கற்பு என்பது உயிரினும் மேலான ஒழுக்கம். * பயமே கொடிய நோயான கவலையை உண்டாக்குகிறது. * கடமை தவறாதவர்களே கடவுள் மீது உண்மையான பக்தி செலுத்த முடியும். * நேர்மையும், உண்மையும் கொண்டவர்களுக்கு வரும் துன்பம் தற்காலிகமானதே. * பிறரை வாழ்த்தினால் பகைமை மறையும்.* மனம் என்னும் விளைநிலத்தில், நல்ல எண்ணத்தை விதை. * பிறரை வாழ்த்தும் போது நம்மைச் சுற்றி நல்ல அலைகள் உருவாகும். வழிகாட்டுகிறார் வேதாத்ரி