உள்ளூர் செய்திகள்

சுக பிரசவமா! துறையூர் அம்பாளை தரிசியுங்க!

பெண்ணுக்கு மறுபிறப்பாக கருதப்படும் பிரசவம் நல்லபடியாக நடக்க, திருச்சி மாவட்டம் துறையூர் அங்காள பரமேஸ்வரியம்மன் (பெரியநாயகி) கோயிலுக்குச் செல்லுங்கள். தல வரலாறு: துறையூர் பகுதியை வல்லாள ராஜா என்பவர் ஆண்டு வந்தார். பறவைகள் தானியங்களைத் தின்றுவிடுமே என்பதற்காக, வயலுக்கு மேல் வலை கட்டி அவற்றை வரவிடாமல் தடுக்குமளவு கருமி அவர். புண்ணியமே செய்யாததால் குழந்தை பாக்கியம் இல்லை. ராஜாவுக்கு அம்பிகையின் அம்சமான பேச்சியம்மனின் நினைவு வந்தது.“அம்மா! எனக்கு குழந்தையில்லை. நாடாள குழந்தை வேண்டும்,” என வேண்டினார்.அந்த கஞ்சரையும் நல்வழிப்படுத்த எண்ணிய பேச்சி சோதிக்க ஆரம்பித்தாள். ராணி கர்ப்பமானாள். ஆனால் 15 மாதமாகியும் குழந்தை பிறக்கவில்லை. ராஜாவும், ராணியும் கலங்கிப் போனார்கள். பேச்சியம்மனை தேடி ஓடினர். முதியவள் வடிவத்தில் உக்கிரமாக வந்த அம்மன், ராணியை தன் மடியில் வைத்து, வயிற்றைக் கிழித்து, குழந்தையை இடுப்புக் கொடியுடன் வெளியே எடுத்தாள். பின் சாந்த வடிவில் அங்காள பரமேஸ்வரி என்ற பெயரில் அங்கு தங்கினாள். சயன நிலை: இங்கு சயன நிலையில் அம்பிகை அருள்பாலிக்கிறாள். உயரம் எட்டே முக்கால் அடி. இவளை 'பெரியநாயகி' என்று அழைப்பர். சன்னதி வாசலில் சாந்த நிலையில், மடியில் குழந்தையை வைத்த பேச்சி அம்மன் இருக்கிறாள். பாலசுப்பிரமணிய சுவாமி, ஆறுபடை முருகன், தட்சிணாமூர்த்தி, மதுரை வீரன் தம்பதி, அகோர வீரபத்திரர், பாவாடைராயன், மகிஷாசுரமர்த்தினி, ராகு கால துர்க்கை சன்னதிகள் இங்கு உள்ளன.பிரார்த்தனை: குழந்தை வரம் வேண்டி பெண்கள் வழிபடுகின்றனர். கர்ப்பிணி பெண்கள் தங்கள் ஊரில் இருந்தபடியே அம்மனை வழிபட, பிரசவம் நலமாக முடியும். அன்றே நடந்த சிசேரியன்பிரசவம் சிரமமாகும் பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்வதை கண்டுபிடித்தது அறிவியல் என்று பெருமை கொள்ளத் தேவையில்லை. புராண காலத்திலேயே இது நடந்துள்ளது என்பதை துறையூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் வரலாறு காட்டுகிறது. ராணியின் வயிற்றைக் கிழித்து, குழந்தையை தொப்புள் கொடியுடன் வெளியே எடுக்கும் பேச்சியம்மனின் சிற்பம், சுதையாக வடிக்கப்பட்டுள்ளது.எப்படி செல்வது: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 40 கி.மீ., விசஷே நாட்கள்: சிவராத்திரிக்கு மறுநாள் துவங்கி, ஒன்பது நாள் மயானக் கொள்ளைத்திருவிழாநேரம் : காலை 7:00 - 11:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 90422 14140அருகிலுள்ள தலம்: திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில்