உள்ளூர் செய்திகள்

தன்னையே தரும் பெருமாள்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகிலுள்ள பொன்மார் கிராமத்தில் 450 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோயில் உள்ளது. தன்னையே தியாகம் செய்பவராக இருப்பதால், 'தியாக வினோத பெருமாள்' என அழைக்கப்படுகிறார். அக்காலத்தில் இந்த ஊருக்கு 'தியாக வினோத நல்லுார்' எனப் பெயர் இருந்தது. ஸ்ரீராமரின் பரம்பரையில் தோன்றிய மன்னர் அம்பரீஷர். இவர் ஏகாதசி திதியன்று விரதமிருந்து விஷ்ணுவை வழிபடுவது வழக்கம். ஒருநாள் ஏகாதசியன்று முனிவரான துர்வாசர் அரண்மனைக்கு வந்தார். பெருமாளின் திருநாமத்தை ஜபித்தபடி மன்னர் இருந்ததால் முனிவரைக் கவனிக்கவில்லை. அலட்சியம் செய்ததாக கருதிய முனிவர் ஒரு பூதத்தை ஏவினார். அது மன்னரைக் கொல்ல முயன்றது. உடனே அங்கு மகாவிஷ்ணுவின் சக்கரம் தோன்றி பூதத்தைக் கொன்றதோடு, துர்வாசரையும் துரத்த ஆரம்பித்தது. மகாவிஷ்ணுவைச் சரணடைந்தார் முனிவர். 'நான் பக்தர்களின் அன்புக்கு கட்டுப்பட்டவன் என்பதால் மன்னர் அம்பரீஷனிடமே சென்று மன்னிப்பு கேள்' எனக் கட்டளையிட்டார் மகாவிஷ்ணு. அப்படியே முனிவரும் செய்ய, துர்வாசரை துன்புறுத்தாமல் விடும்படி சக்கரத்திடம் கேட்டுக் கொண்டார் அம்பரீஷர். உயிர் தப்பினார் துர்வாசர். சக்கரத்தை பிரயோகம் செய்த கோலத்தில் பெருமாள் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். ஏகாதசியன்று இவரை தரிசிப்போருக்கு எதிரி தொல்லை மறையும். நீண்டநாள் நோய்கள் விலகும். திருமணத்தடை நீங்கும். குழந்தைப் பேறு உண்டாகும். சிதிலமடைந்த இக்கோயில் திருப்பணி செய்யப்பட்டு ஜூன் 5, 2023 காலை 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. திருப்பணி, கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க விரும்புவோர் 80562 74746 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். முகவரி: பொன்மார் பெருமாள் டிரஸ்ட் வங்கி கணக்கு எண்: 736901000317IFSC: ICIC0007369வங்கி: ஐசிஐசிஐ கிளை: மாம்பாக்கம் எப்படி செல்வது:* சென்னை மேடவாக்கம் சந்திப்பு (கூட்டு ரோடு) சாலையில் 7 கி.மீ., * வண்டலுார் உயிரியல் பூங்காவில் இருந்து 11 கி.மீ., * கேளம்பாக்கத்தில் இருந்து 12 கி.மீ., விசேஷ நாள்: கிருஷ்ண ஜெயந்தி வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீராமநவமிதொடர்புக்கு: 80562 74746, 87786 93401நேரம்: காலை 6:00 - 10:30 மணி; மாலை 4:00 - 7:30 மணிஅருகிலுள்ள தலம்: ரத்தினமங்கலம் லட்சுமி குபேரர் கோயில் 6 கி.மீ.,நேரம் அதிகாலை 5:30 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணிதொடர்புக்கு: 94440 20084