எண்ணியதை அடைவது எளிது
* எண்ணியதை எப்போதுமே நினைத்தால் அதை அடைவது எளிது. * விடா முயற்சி, சிறந்த அறிவாற்றல் இவ்விரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுபவரின் குடி உயர்ந்து விளங்கும். * ஒருவருக்கு வறுமையைப் போன்று துன்பம் தருவது எது என்றால், அது வறுமையே ஆகும். * ஒருவர் எதைக் காக்காவிட்டாலும் நாவைக் காக்க வேண்டும். மீறினால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.* எந்தப் பொருள் மீது பற்று இல்லையோ, அந்தப் பொருளால் துன்பமே வராது. * பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னைப் பெரிதாக நினைப்பவன் விரைவாக கெடுவான்.* பற்றுகளை அகற்றுவதற்காகவே பற்றில்லாதவனைப் பற்றி நிற்க வேண்டும். * மயிலிறகுதான் என்றாலும் அளவுக்கு அதிகமாக ஏற்றினால், ஏற்றிய வண்டியின் அச்சு முறியும்.* உலகத்தை வெல்லக் கருதுபவர், கலங்காமல் உரிய காலத்துக்குக் காத்திருப்பர். * பேராசை என்னும் பெருந்துன்பம் தொலைந்தால், இன்பம் இடைவிடாமல் வரும்.* முகக்குறிப்பில் அகக்குறிப்பை அறிபவரை என்ன பொறுப்பைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள். * உண்டதும், செரித்ததும் அறிந்து உண்டால் மருந்து என ஒன்று தேவையே இல்லை. என்கிறார் திருவள்ளுவர்