உள்ளூர் செய்திகள்

அறிவுக்கதவு திறந்தே இருக்கட்டும்

* அறிவுக்கு முற்றுப்புள்ளி வைக்காதே. நீ சாகும்வரை அறிவுக்கதவு திறந்தே இருக்கட்டும். * நீதி, சத்தியம், தெளிவான புத்தி, தைரியம் இவையே நிரந்தரமான சுகத்தை தரும். * உன் தகுதியை உயர்த்திக்கொள். அப்போது மகிழ்ச்சி தானாகவே வரும். * உன்னைப் பற்றி தெரியாத ஒருவரின் போற்றுதலையோ, துாற்றுதலையோ பொருட்படுத்துவது மடத்தனம். * யார் பிறரிடம் நெறி தவறி நடக்கிறாரோ, அவர் தனக்கே கேடு விளைவித்து கொள்கிறார். * தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் செயல்படு. * செய்யக்கூடாதவைகளை செய்வதும், செய்வதை செய்யாமல் இருப்பதும் குற்றமாகும். * பிறரைப் பற்றி சிந்தனை செய்து காலத்தை வீணாக்காதே. * அறிவு என்னும் கண்ணை எவன் மூடிக்கொள்கிறானோ, அவனே உண்மையில் பார்வையற்றவன். * இன்பத்தையும், துன்பத்தையும் யார் சமமாக கருதுகிறாரோ அவரே ஞானி. * விறகை நெருப்பு எரித்து சாம்பலாக்குவதுபோல, தீவினைகளை ஞானம் என்னும் நெருப்பு சாம்பலாக்கிவிடும். என்கிறார் ராஜாஜி