உள்ளூர் செய்திகள்

அன்பு வாழ வைக்கும்

* மனம் என்னும் மாளிகையின் ஒவ்வொரு துாணும், தளமும் அன்பு எனும் வண்ணத்தால் ஒளிரட்டும். அது உலகத்தை வாழ வைக்கும்.* நாம் கடவுளின் கையில் இருக்கும் கருவி எனும் எண்ணத்தில் திறந்த மனதுடன் செயல்படுவோம். எண்ணம், சொல், செயல் மூன்றாலும் பிறருக்கு உதவி செய்வதில் மகிழ்ச்சி கொள்வோம்.* தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் பணிகளில் ஈடுபட வேண்டும். * பேசும் ஒவ்வொரு சொல்லும் அன்பு, ஆனந்தம், இனிமை, உண்மை, உற்சாகத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அமையட்டும். சில நேரத்தில் பேச்சை விடவும் மவுனம் சிறந்தது.* வெற்றியும், புகழும் கிடைக்கும்போது முழு மனதுடனும், நேர்மையுடனும் கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டும். கடவுள் என்னும் அழிவற்ற ஒளியில் நாமும் ஒரு பகுதி என்பதை உணர்ந்து சரணடைவோம்.* உள்ளத்தில் மகிழ்ச்சி இருந்தால் உதட்டில் இனிய வார்த்தை ெவளிப்படும். கண்ணிலே அன்பிருந்தால் கற்சிலையில் தெய்வம் அருள்புரியும்.சொல்கிறார் பரமானந்தர்