நான்கு முகத்துடன் முருகன்
விஸ்வாமித்திரரின் அகந்தையை அழித்து, 'பிரம்ம ரிஷி' பட்டம் வழங்கிய நான்கு முக முருகன் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் கோயில் கொண்டுள்ளார். பிரம்ம ரிஷி பட்டத்திற்காக விசுவாமித்திர முனிவர் அம்பிகையை நோக்கி தவமிருந்தார். ஒருநாள் சிறுமி ஒருத்தி எதிரில் நிற்க கண்டார். வந்திருப்பவர் அம்பிகை என உணர்ந்து குங்குமம் இட்டு வரவேற்றார். அதில் இருந்து தீப்பிழம்பு தோன்றி நான்கு முகம் கொண்ட தெய்வக் குழந்தை உருவானது. 'ஆறுமுகம் கொண்ட முருகன் அவதரித்தது போல இவனை அவதரிக்க செய்தேன். அவன் உனக்கு வழிகாட்டுவான்'' என முனிவரிடம் தெரிவித்து மறைந்தாள். 'தெற்கு நோக்கி செல்' என முருகனும் உத்தரவிட்டு மறைந்தார். அதன்படி சென்ற போது ஓரிடத்தில், 'பிரம்ம ரிஷியே வருக' என அழைப்பதைக் கேட்டு நின்றார். புன்னகைத்தபடி சிறுவன் ஒருவன் நிற்க, அவன் முருகன் என்பதை உணர்ந்தார். அப்போது நான்குமுக முருகனும், அம்பிகையும் வசிஷ்டருடன் காட்சியளித்தனர். ' நீ செய்த தவத்தின் பலனாக பிரம்மரிஷி பட்டத்தை வழங்கினோம்' என வசிஷ்டர் வாழ்த்தினார். இதனடிப்படையில் இங்கு வள்ளி, தேவசேனாவுடன் முருகன் கோயில் கொண்டிருக்கிறார். இவர் பிரம்மாவின் அம்சமாக நான்கு முகங்களையும், மகாவிஷ்ணுவின் அம்சமாக சங்கு, சக்கர முத்திரைகளையும், சிவனின் அம்சமாக கவுரிசங்கர ருத்ராட்சம் மாலையும் அணிந்திருக்கிறார். பாலாதிரிபுரசுந்தரியை(அம்பிகை) வழிபடும் நிலையில் விசுவாமித்திரர் சன்னதி இங்குள்ளது. தட்சிணாமூர்த்தி, துர்கை, பைரவர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. 'சத்திய யுகத்தில் படைப்புத் தொழிலை நடத்தவுள்ள அனுமன் நான்கு முகத்துடன் இருக்கிறார். செவ்வாய் தோஷ பரிகாரம், திருமணம், குழந்தைப்பேறுக்காக செவ்வாயன்று காலை 7:00 மணிக்கு, 'செம்பால்' (குங்குமம் கலந்த பால்) அபிேஷகம் நடக்கிறது. சித்ரா பவுர்ணமியன்று சிறப்பு பூஜை நடக்கும்.எப்படி செல்வது: மதுரையில் இருந்து 53 கி.மீ.,விசேஷ நாள்: வைகாசி விசாகம் திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் தேய்பிறை அஷ்டமிநேரம்: காலை 7:00 - 11:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 99524 25428அருகிலுள்ள தலம்: சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் 1 கி.மீ.,நேரம்: காலை 7:30 - 11:30 மணி; மாலை 5:30 - 8:30 மணிதொடர்புக்கு: 94432 26861