உள்ளூர் செய்திகள்

லாப முத்திரையுடன் பரசுராமர்

மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரி அருகிலுள்ள சிப்லன் குன்றின் மீது மகாவிஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் கோயில் உள்ளது. லாப முத்திரையுடன் வீற்றிருக்கும் இவரை தரிசித்தால் லாபம் பெருகும். இத்தலத்தை 'பரசுராம் பூமி' எனவும் அழைக்கின்றனர். இப்பகுதியில் இருந்த புதரில் பசு ஒன்று தினமும் பால் சுரந்து வந்தது. பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய பரசுராமர் குறிப்பிட்ட இடத்தில் சுயம்பு வடிவில் தான் புதைந்திருப்பதாக தெரிவித்தார். இதன் பின் இங்கு சுவாமி சிலையை பிரதிஷ்டை செய்தனர். குன்றின் மீது கட்டப்பட்ட கற்கோயில் இது. 18ம் நுாற்றாண்டில் வாழ்ந்த பிரம்மேந்திர சுவாமிகள் திருப்பணி செய்து கோயிலை புதுப்பித்தார். மூலவர் பரசுராமருடன் பிரம்மா, விஷ்ணு கருவறையில் நின்ற கோலத்தில் உள்ளனர். இதை எங்கும் காணமுடியாது. கைகளில் வில், அம்பு, கோடரியை ஏந்தியபடி 'லாப முத்திரை' காட்டியபடி பரசுராமர் உள்ளார். பிரம்மா, விஷ்ணு நான்கு கைகளில் ஆயுதங்கள் ஏந்தியுள்ளனர். மராட்டிய மன்னரான வீரசிவாஜி இங்கு பலமுறை தரிசனம் செய்துள்ளார். கோயிலுக்கு அருகில் வசிஷ்தி நதி ஒடுகிறது. படகு சவாரியும் இதிலுண்டு. வலம்புரி விநாயகர், அனுமன், கங்காதேவி சன்னதிகள் உள்ளன. விருப்பம் நிறைவேற பரசுராமரின் தாயான ரேணுகா தேவிக்கு வளையல் காணிக்கை செலுத்துகின்றனர். கோயிலுக்குள் 'பரசுராம் பான கங்கா' என்னும் குளம் உள்ளது. இதனை பரசுராமர் தன் வில்லால் உருவாக்கியுள்ளார். பாவத்தில் இருந்து விடுபட இதன் நீரை பக்தர்கள் தலையில் தெளிக்கின்றனர். மும்பையிலிருந்து பேருந்து வசதி உள்ளது. எப்படி செல்வது * மும்பை - கோவா தேசிய சாலையில்(என்.எச்.66) 238 கி.மீ.,* புனேயில் இருந்து 232 கி.மீ., * சதாராவில் இருந்து 121 கி.மீ., விசேஷ நாள்: பரசுராமர் ஜெயந்தி ஜென்மாஷ்டமி, ஸ்ரீராமநவமிநேரம்: காலை 6:00 - இரவு 9:00 மணிதொடர்புக்கு: 077740 - 21100அருகிலுள்ள தலம்: கோல்ஹாபூர் மகாலட்சுமி மந்திர் 165 கி.மீ., நேரம்: அதிகாலை 4:30 -இரவு 11:00 மணிதொடர்புக்கு: 022 - 2351 4732, 2351 3831