ரங்கத்தில் பள்ளி கொண்ட ரங்கா நெஞ்சத்தில் பள்ளி கொள்ள எழுந்து வா!
திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் வரலாறுசீதையை மீட்க உதவிய விபீஷணனுக்கு, தான் பூஜித்த ரங்கநாதரை தந்தார் ராமன். இலங்கை திரும்பிக் கொண்டிருந்த விபீஷணன், வழியில் காவிரியைக்கண்டான். அது சுழன்றோடிய அழகு கண்ட விபீஷணன் சுவாமியை கீழே வைத்துவிட்டு நீராடினான். பின்பு, அவன் சிலையை எடுக்க முயன்றபோது முடியவில்லை. தர்மவர்மா என்ற மன்னன், இங்கே தங்கிய ரங்கநாதருக்கு கோயில் எழுப்பினான்.அபிஷேகம் இல்லாதவர்ஸ்ரீரங்கத்தில் தங்கி பல காலம் ரங்கநாதருக்கு சேவை செய்த ராமானுஜர், இங்கேயே மோட்சம் அடைந்தார். அவரது உடலை, சீடர்கள் பத்மாசனத்தில் அமர வைத்து அடக்கம் செய்தனர். சில காலம் கழித்து அவர் அதே கோலத்திலேயே பூமிக்கு மேலெழுந்தார். இவர் இங்கு தனிச் சன்னதியில் காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது. சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சேர்ந்த கலவை சாத்தப்படுகிறது.22 குடம் நீரில் குளிப்பவர்ஆனி கேட்டை நட்சத்திரத்தன்று அகில், சந்தனக்கலவை சாத்தி ரங்கநாதருக்கு ஜேஷ்டாபிஷேகம் (தைலாபிஷேகம்) செய்கின்றனர். அன்றைய தினம் உற்சவர் நம்பெருமாளுக்கு (வைகுண்ட ஏகாதசியன்று பவனி வருபவர்) அணியப்பட்டுள்ள தங்கக்கவசம் களையப்பட்டு, 22 குடங்களில் காவிரித்தீர்த்த அபிஷேகம் செய்யப்படும். மற்ற நாட்களில் காப்பு அணிந்த நிலையிலேயே அபிஷேகம் நடக்கும். சுக்கிரனால் பாதிப்பா வெண்பட்டு சாத்துங்க!கோயில் பிரகாரத்தில் தானிய லட்சுமிக்கு சன்னதி இருக்கிறது. இவளுக்கு வலப்புறம் கிருஷ்ணர், இடதுபுறம் நரசிம்மர். சுக்கிரனால் பாதிக்கப்படும் ஜாதகதாரர்கள் இவளுக்கு வெண்பட்டு, வெள்ளை மலர் அணிவித்து, வெண்மொச்சைதானியம் படைத்து வழிபடுகிறார்கள். பிரம்மோற்ஸவத்தின்போதுபெருமாள், இவளது சன்னதி அருகில் எழுந்தருளி நெல் அளக்கும் வைபவத்தை காண்கிறார். சோற்றுக்கு பஞ்சமில்லைஅன்னத்திற்கு அதிபதியான அன்னபெருமாள் இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் இருக்கிறார். கைகளில் கலசம், தண்டம், மற்றும் அன்ன உருண்டை வைத்திருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள, உணவிற்கு பஞ்சமில்லாத நிலை ஏற்படும்.