இதுவே வாழ்க்கையின் நோக்கம்
* பிறருக்கு உதவி செய்வதே வாழ்க்கையின் நோக்கமாக இருக்கட்டும். * உலகில் அமைதியை விட உயர்வானது இல்லை. * உண்மையை அழிக்கும் சக்தி யாருக்கும் இல்லை. * ஆழமில்லாத தண்ணீரில் இருந்துதான் இரைச்சல் எழும். ஆழ்கடல் எப்போதும் அமைதியாகவே இருக்கும். * மனதில் உண்மையும், அன்பும் இருந்தால் மகிழ்ச்சியாக வாழலாம். * எதிலும் திருப்தியாக இருங்கள். வாழ்வு அர்த்தமுள்ளதாகும். * மகிழ்ச்சியின் பாதையை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. காரணம் மகிழ்ச்சி என்பதே ஒரு பாதைதான். * தீய செயலைச் செய்தவர் எங்கு சென்று ஒளிந்துகொண்டாலும், அதன் விளைவில் இருந்து தப்பவே முடியாது. * ஒழுக்கமான மனம் மட்டுமே மகிழ்ச்சியைக் கொடுக்கும்.* வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை. இதை உணர்ந்தால் நமக்குள் இருக்கும் ஆணவம் அழியும். * விட்டுக் கொடுங்கள், விட்டு விடுங்கள். இதுவே நிம்மதிக்கான வழி. * நீங்கள் செய்த செயல்கள் நிழல் போல, உங்களை தொடர்ந்து வரும். * கோபத்தை அன்பினாலும், தீமையை நன்மையினாலும் வெல்லுங்கள். சொல்கிறார் புத்தர்