பிரபலமாக வேண்டுமா
நீங்கள் பிரபலமாக வேண்டுமா பெங்களூரு காவல் பைரசந்திரா தொட்டண்ணா நகர் தங்கமலையில் அருள் பாலிக்கும் முருகப்பெருமானை தரிசனம் செய்தால் போதும்.இங்குள்ள மலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பூஜித்து வந்த வேலை இம்மலையில் நிறுவி எல்லோரையும் வழிபட செய்தார். அதன் அருகே காலப்போக்கில் முருகப்பெருமானை துறவியருடன் இணைந்து பிரதிஷ்டை செய்துள்ளனர் இங்குள்ள மக்கள். ஆறுபடை முருகன் கோயிலில் ஒன்றான திருச்செந்துாரில் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்து வாய் பேச முடியாத குமரகுருபரரை அருட்சக்தியினால் பேச வைத்து பக்தராக்கினார் முருகப்பெருமான். அதுபோல இங்கு இப்பகுதியை சார்ந்த பக்தர் ஒருவரின் 9 வயது வரை பேசாமல் இருந்த குழந்தையை ஆடி கார்த்திகை அன்று பேச வைத்தார் தங்கமலை முருகப்பெருமான். இம்முருகப்பெருமானை தரிசித்த பிறகு அடிப்படை உறுப்பினராக இருந்தவர்கள் கூட அரசியலில் ஜொலிக்கின்றார்கள். இம்முருகப்பெருமானிடம் பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை தயக்கமின்றி சொல்லுவதற்காக வள்ளி, தெய்வானையை சற்று தள்ளியே பிரதிஷ்டை செய்துள்ளனர். மனைவியருடன் அமைந்த நவக்கிரக சன்னதி உள்ளது.தத்துவங்களில் ஒன்றான சைவ சித்தாந்தம் சொல்வது போல 84 லட்சம் பிறப்புகளில் இருந்து விடுபட இக்கோயிலில் எண்பத்து நான்கு படிகளை அமைத்துள்ளனர். படிப்பாதையில் இடும்பன் காவடி எடுக்கும் காட்சியும், அவ்வையாருக்கு அருள் செய்யும் முருகனுடைய சிற்பங்களும் உள்ளன. இம்முருகப்பெருமானை தரிசிப்பவர்கள் வாழ்வில் பணமும் பேரும் புகழும் தேடி வரும். ஒரு முறையேனும் தங்கமலை முருகப்பெருமானை தரிசிக்க வாருங்கள். எப்படி செல்வது: பெங்களூரு சிவாஜி நகரில் இருந்து 3 கி.மீ.,விசேஷ நாள்: வைகாசி விசாகம், ஆடி கார்த்திகை, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம்தொடர்புக்கு: 99729 99663, 88254 34393நேரம்: காலை 6:00 - 1:00 மணி; மாலை 4:00 - 9:00 மணிஅருகிலுள்ள தலம்: சக்தி மாரியம்மன் கோயில் 5 கி.மீ., நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 90361 38006