உள்ளூர் செய்திகள்

ஜெயிப்பது நிஜம்

பிப்.21 - பிறந்த நாள்* எதிலும் ஆர்வமாக ஈடுபடு. ஜெயிப்பது நிஜம். * உண்மையான தேவைகள் நிச்சயம் உன்னைத் தேடி வரும். * அமைதியாக இருப்பதைவிட உண்மையை பேசு. * தவறான பாதையில் செல்பவர்களுடன் பழகாதே. * கடவுளின் அருளை நீயே உணர மறுக்கிறாய்.* ஆபத்தான சமயத்தில் அமைதியாக இருப்பது அவசியம். * கஷ்டம் வந்தால் அதை கடவுள் கொடுத்த வரமாக கருது. * கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* பொறாமை குணம் தைரியம் இல்லாதவர்களுக்கே வரும். * தற்பெருமையாக பேசாதே. மீறினால் வாழ்க்கையில் முன்னேறுவது கஷ்டம்.* கடந்ததைப் பற்றி வருந்தாதே. வருவதை பற்றி கற்பனை செய்யாதே.* உனக்கு தேவையானது கடவுளிடம் உள்ளது. * நல்லவர்களுடன் பழகு. அவர்களின் பேச்சு ஆறுதல் தரும். * குறைவாகப் பேசு. அதுவே நல்லது. * தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள். வெற்றிப்பாதையில் பயணிக்கலாம். * மற்றவர்களுடன் வீணாக சச்சரவில் ஈடுபடாதே. * மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு நல்ல வழியில் வாழ்க்கையை நடத்திச் செல். நம்பிக்கை தருகிறார் ஸ்ரீஅன்னை