உள்ளூர் செய்திகள்

வாழ்க்கையில் ஜெயிப்பாய்

* தவறு செய்வது இயல்பு. ஆனால் அதைத் திருத்திக் கொள். வாழ்க்கையில் ஜெயிப்பாய். * அறிவுத் தேடலை ஒருபோதும் நிறுத்தாதே. தினமும் ஏதாவது ஒன்றை கற்றுக்கொள். * கோபத்திற்கு ஆளாகுபவர் தனக்குத் தானே தீ வைத்துக் கொள்கிறார். * பிறரது துன்பத்தைத் தீர்க்கும் வகையில் ஆறுதலாக பேசு. அதுவும் தர்மம். * உதவி செய்ய எவ்வளவு பேர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருப்பது அவசியம்.* ஆணும் பெண்ணும் குடும்பமாக இணைந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை. * ஒன்றை ஆக்குவதும் அழிப்பதும் உன் கையில் தான் உள்ளது. * உண்மையான அன்பு கொண்டவன் யார் மீதும் கோபப்பட மாட்டான்.* முதலில் உன்னை திருத்திக் கொள். பிறகு மற்றவர்களைத் திருத்தலாம். * சோம்பேறியாக இருப்பவன் தனக்கு மட்டுமில்லாமல், சமுதாயத்திற்கும் தீங்கு செய்கிறான்.* மனஉறுதி, உழைப்பு, நாணயம் இருந்தால் தொழிலில் லாபம் பெருகும்.* மனதில் ஆழ்ந்த யோசனை எழுந்து விட்டால், விரைவில் லட்சியத்தை அடைவாய். * மலர்ந்த முகமும், இனிய சொல்லும் தான் மகிழ்ச்சியாக இருப்பதற்கு வழி.* கடவுள் நினைத்தால் எதுவும் கிடைக்கும். அதற்கு நிஜமான பக்தி வேண்டும். நம்பிக்கை தருகிறார் பாரதியார்