இரண்டு தாயார்
UPDATED : ஆக 20, 2025 | ADDED : ஆக 20, 2025
சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து புறப்பட்ட ஆறு தீப்பொறிகள் கங்கையில் மிதந்தன. அத்தீப்பொறிகளே ஆறு குழந்தைகளாக முருகனாக அவதரித்தன. இதனால் முருகனுக்கு கங்கையின் புதல்வன் என்னும் பொருளில் 'காங்கேயன்' என பெயர் வந்தது. ஆனால் விநாயகருக்கு தம்பியான முருகனைப் போல கங்கையுடன் நேரடி தொடர்பு இல்லாவிட்டாலும், அவரும் கங்கையை தாயாக ஏற்றார். கங்கையான நீரைக் கண்டதும் மகிழ்வது யானையின் இயல்பு. யானை மட்டுமே துதிக்கையால் நீரை உறிஞ்சி பீய்ச்சாங்குழல் போல தன் உடம்பில் வாரியடித்துக் கொண்டு மகிழும். ஆனைமுகம் கொண்ட விநாயகரும் பார்வதியுடன் கங்கையையும் தாயாக ஏற்றதால் 'த்வை மாதுரர்' என பெயர் பெற்றார். இதற்கு 'இரண்டு தாயார் கொண்டவர்' என பொருள்.